,

மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்

Spread the love

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வரம் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும்  27 குடும்பங்களுக்கு  காணி அனுமதிப்   பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(20.05) செவ்வாய்க்கிழமை  மன்னார்  பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப்  தலைமையில்  இடம் பெற்ற  இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்,  மேலதிக மாவட்டச்  செயலாளர் (காணி)  மா. சிறிஸ்கந்தராஜா,மற்றும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட அலுவலர்கள்  கலந்து கொண்டு பொது மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page