கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சிறுமியின் மரணம் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு, இன்றையதினம்(10.05.2025) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, பாடசாலையிலும் தனியார் வகுப்பிலும் நடந்த சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் உரிய முறையில் நடைபெற்றதா என்பது குறித்து கல்வி அமைச்சினால் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர்,
இந்த வழக்கில் அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதனை நெறிப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள குழந்தைகள் நல மருத்துவர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் பிரதமர் நியமித்துள்ளார்










Leave a Reply