,

காணாமல் போயுள்ள வயோதிபப் பெண்

Spread the love

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப பெண்ணொருவர் கடந்த ஒரு வாரமாகக் காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற வயோதிப தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறியவர் இன்னும் வீடு திரும்பவில்லை என உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது 0775570692, 0770253210 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page