,

அனுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் வைத்தியசாலையில்

Spread the love

அனுராதபுரம் – திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பிலான தகவல்கள் வௌியாகவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page