போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா

Spread the love

 

போதைப்பொருள் பயன்படுத்தியமை தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த் திரைப்படத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் ஸ்ரீகாந்திடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைக்கு அடிமையானது எப்படி என்பது குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றெழுத்தில் பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர், தான் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் கொகைன் போதைப்பொருளை வழங்குவாராம்.

அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் கூட கொகைனுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இளம் இசையமைப்பாளர் ஒருவர் கொகைன் இல்லாமல் இரவில் தூங்கமாட்டாராம்.

அவர்களையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page