தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

Spread the love

­

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 202,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

அத்துடன் 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாக, விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page