,

நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

Spread the love

 

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்பதற்காக கடந்த வாரம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page