,

நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு

Spread the love

 

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளுக்கமைய,
ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20.06.2025) நாடாளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு கட்டணங்களை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4,000 ரூபாவாகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபாவாகவும் வசூலிக்க நாடாளுமன்றகுழு தீர்மானித்துள்ளது.

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்களை மாற்றமின்றி பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை நாடாளுமன்ற
ஊழியர்களுக்காக ஒதுக்குவது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page