,

கெஹெலியவின் மகளுக்குப் பிணை

Spread the love

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20.06) விடுவிக்கப்பட்டார்.

நிதிமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மருமகன் நேற்று (19.06) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றம் ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்க அனுமதியளித்தது.

இருப்பினும், சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது போனமையால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page