,

காங்கேசன் துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Spread the love

சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை நேற்றைய தினத்திலிருந்து (18.06) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 13ம் திகதி முதல் பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டடிருந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 2023 முதல், சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கைக் கப்பல், சனிக்கிழமை தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page