,

சுன்னாகத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது

Spread the love

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு

கஞ்சாவுடன் ஒருவர் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கை, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ். ராமநாயக்க அவர்களின் தலைமையிலிலும், குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கெலும் சிறிமா மற்றும் அவரது குழுவினரால்  குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page