அகமதாபாத் விமான விபத்தில் இரண்டு கறுப்பு பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிப்பு

Spread the love

அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தில் காணப்படும் 2 கறுப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்
விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கறுப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறக்கும்போது அதைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக
அதிவேக விபத்துகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும். இந்த கறுப்பு பெட்டிகள் மூலம்
விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page