புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் உலகை உலுக்கிய சம்பவம்

Spread the love

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 170 பேர் பலியாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று (12.06) வியாழக்கிழமை, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பயணிகளில் 169 இந்தியர்களும், 53 இங்கிலாந்து நாட்டவர்களும், ஒரு கனடா நாட்டவரும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
குறித்த விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்(Gatwick) விமான நிலையத்திற்கு இன்று (12) மதியம் ஏர் இந்தியாவின் AI 171 போயிங் (Boeing) விமானம் புறப்பட்டது. எனினும்,
புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானமை மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page