, ,

மனைவியை வெட்டிக்கொன்று தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்

Spread the love

வவுனியாவில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில்
சரணடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

32 வயதான ரஜூட் சுவர்ணலதா என்ற தனது மனைவியை கொலை செய்த கணவன் அவரின் தலையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03.06) காலை செவ்வாய்க்கிழமை புளியங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து உடலை காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page